தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த நிலையில் தென்னிந்தியா பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் இன்று மாலை தமிழகத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.
ஆனால் இன்று மதியம் வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று 20 இடங்களில் 100 பாரான்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
அதன்படி, அந்த வகையில் வேலூர் மற்றும் மீனம்பாக்கம் 106 பாரன்ஹீட்டும், திருத்தணியி 105 பாரன்ஹீட்டும், நுங்கம்பாக்கம் மற்றும் பாளையங்கோட்டை 104 பாரான்ஹீட்டும், திருச்சி மற்றும் நாகப்பட்டினத்தில் 102 பாரான்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது.