`விக்கி கௌஷலை அவமானப்படுத்தினேனா?'- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க சல்மான் கான் செய்த செயல்!

பாலிவுட்டில் பாய் என்று புகழப்படும் நடிகர் சல்மான் கான். இரண்டு நாள்களுக்கு முன்பு துபாயில் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்கப் புறப்பட்டுச் சென்ற போது விமான நிலையத்தில் தன்னைப் பார்க்கக் காத்திருந்த சிறுவனைக் கட்டிப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.

அவர் துபாய் சென்ற பிறகும் சர்ச்சைகள்தான் அவரை விடுவதாக இல்லை. திரைப்பட விருது வழங்கும் இடத்தில் சல்மான் கான் பலத்த பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தார். அதே நேரம் நடிகர் விக்கி கெளஷல் தனது ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சல்மான் கான் வந்தார்.

சல்மான் கான், விக்கு கௌஷல்

சல்மானைப் பார்த்தவுடன் விக்கி அவரிடம் கை குலுக்க முயன்றார். ஆனால் விக்கி கெளஷலைப் பாதுகாவலர்கள் ஒதுக்கிவிட்டு சல்மான் கானுக்கு வழிவிட்டனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதாவது விக்கி கெளஷலை சல்மான் கான் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தார் என்று செய்தி பரவியது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் சோசியல் மீடியாவில் மோதிக்கொண்டனர். அதில் குறிப்பாக சல்மான் கானின் முன்னாள் காதலியான கத்ரீனா கைஃப்பை விக்கி கௌஷல் திருமணம் செய்திருப்பதால்தான் சல்மான் கான் அவரை மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இது சர்ச்சையானதால் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க சல்மான் கான் விருது வழங்கும் விழாவில் விக்கி கெளஷலைக் கட்டிப்பிடித்து உரையாடினார்.

கத்ரீனா கைஃப்

இது தொடர்பான வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பிரச்னை குறித்து நடிகர் விக்கி கெளஷலும் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல விஷயங்கள் பற்றித் தேவையில்லாத விவாதங்கள் நடக்கின்றன. சில நேரங்களில் வீடியோவில் தோன்றும் விஷயங்களில் உண்மை இருப்பதில்லை. அது பற்றிப் பேசுவதில் அர்த்தம் இல்லை” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.