சந்தையில் அறிமுகம் ஆகவுள்ள ஸ்மார்ட்போன்கள்: ஒவ்வொரு மாதமும் சில மொபைல் நிறுவனங்கள் அவற்றின் புதிய பட்ஜெட், ஃப்ளேஷிப் அல்லது பிரீமியம் ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. மே மாதத்தில் இப்படி பல சிறந்த போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வகையில் இப்போது சில சிறந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதத்திலும் அறிமுகப்படுத்தப்படும். உங்களுக்கோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் இன்னும் சில நாட்களில் சந்தையில் அறிமுகம் ஆகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்களின் விவரங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும்
டிப்ஸ்டர் டெபயன் ராய், வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். Realme 11 Pro, Realme 11 Pro+, Galaxy F54, OnePlus Nord, iQOO Neo 7 Pro, Infinix Note 30 series மற்றும் Oppo Reno 10 தொடர்கள் ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் ena டிப்ஸ்டரின் கூறியுள்ளார். இருப்பினும், Oppo தொடர் பற்றி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதாவது, இது ஜூலை மாதத்திலும் அறிமுகம் ஆகலாம், அல்லது தாமதமும் ஆகலாம்.
Upcoming phones that are Confirmed to launch in June in India
• Realme 11 Pro, Realme 11 Pro+
• Galaxy F54 (announcement in May)
• OnePlus Nord 3
• iQOO Neo 7 Pro
• Infinix Note 30 Series
• Oppo Reno 10 Series (this isn’t confirmed yet)
For which one are you waiting ?
— Debayan Roy (Gadgetsdata) (@Gadgetsdata) May 26, 2023
OnePlus Nord 3
ஒன்பிளஸ் நோர்ட் தொடரின் புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நார்ட் 3 ஆக இருக்கும். இதை நிறுவனம் ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தும். இந்த ஃபோன் 6.74 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 9000 பிராசசர், 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 ஓஐஎஸ் + 8எம்பி யுடபிள்யூ+ 2எம்பி மூன்றாவது கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில் செல்பி எடுக்க 16எம்பி கேமரா கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் 30 முதல் 32,000 ரூபாய் வரை இருக்கலாம்.
Infinix Note 30 தொடர்
இன்பினிக்ஸ் நோட் 30 தொடரை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்நிறுவனம் இந்தியாவிலும் இந்த போனை அறிமுகப்படுத்தலாம். நோட் 30, நோட் 30i, நோட் 30 5ஜி மற்றும் இன்ஃபினிக்ஸ் நோட் 30 ப்ரோ உள்ளிட்ட நான்கு ஸ்மார்ட்போன்கள் இன்ஃபினிக்ஸ் நோட் 30 தொடரின் கீழ் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் 6.78 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தைப் பெறுகின்றன. இன்ஃபினிக்ஸ் நோட் 30 ப்ரோ மொபைல் போன் ஆனது 108MP கேமரா, 5000 mAh பேட்டரி மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் ஆகியவற்றின் ஆதரவைக் கொண்டுள்ளது.
Realme 11 Pro 5G தொடர்
ரியல்மீ சீனாவில் ரியல்மீ 11 ப்ரோ 5ஜி தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது நிறுவனம் விரைவில் இந்த தொடரை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தொடரின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும், இதில் ரியல்மீ 11 ப்ரோ (Realme 11 Pro) மற்றும் ரியல்மீ 11 ப்ரோ+ (Realme 11 Pro+) ஆகியவை அடங்கும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் கர்வ்ட் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் 6nm மீடியாடெக் டைமன்சிட்டி 7050 SoC மற்றும் 5000 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 67W ஃபாஸ்ட் சார்ஜர் அடிப்படை மாறுபாட்டிலும், 100W ஃபாஸ்ட் சார்ஜர் புரோ வேரியண்டிலும் கிடைக்கும்.