2-year-old given life for possessing Bible | பைபிள் வைத்திருந்ததற்காக 2 வயது குழந்தைக்கு ஆயுள்

வாஷிங்டன்,-வட கொரியாவில், ‘பைபிள்’ வைத்திருந்ததற்காக, 2 வயது குழந்தை உட்பட பல கிறிஸ்துவர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது.

கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, அணு ஆயுத விவகாரத்தில் முட்டல் மோதல் நிலவி வருகிறது. இதனால், இந்த இரு நாடுகளுக்கு இடையே எந்த உறவும் இல்லை. இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை, அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:

வட கொரியாவில், பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன், 70 ஆயிரம் கிறிஸ்துவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், 2 வயது ஆண் குழந்தையும் அடங்கும். குழந்தையின் பெற்றோர் பைபிள் வைத்திருந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களோடு, 2 வயது குழந்தைக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவர்கள், தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் விவரித்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.