Gujrat Titans: IPL போட்டிகளில் அற்புதமாய் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் பட்டியல்

IPL 2023 Qualifier 2: ஐபில் 2023ம் போட்டித்தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் கிளைமே இறுதிப் போட்டிக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதிபெற்ற நிலையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து, நாளை இதே மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரிட்சையில் இறங்குகின்றன. ஐபில் போட்டித்தொடரில் 5ஆவது கோப்பையைப் பெறவேண்டும் என்ற உத்வேகத்தில் சென்னை அணியும், நடப்பு சாபியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, சாம்பியன்ஷிப்பை தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் செய்யும்.  

குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) இடையேயான ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 மோதலில் ஷுப்மான் கில் ஒரு பயங்கர சதத்தை அடித்து தனது அணியை இறுதிப் போட்டிக்கு வர உதவினார். 16 ஆட்டங்களில் 60.79 என்ற அதிர்ச்சியூட்டும் சராசரி மற்றும் 156.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 851 ரன்களுடன் ஆரஞ்சு கேப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார் சுப்மான் கில். இது, இந்த சீசனில் கில்லின் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, குஜராத் அணிக்காக, மோஹித் ஷர்மா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார், இவர்கள் இருவரின் இந்த அபாரமான திறமை, குஜராத் அணிஐ குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெறச் செய்தது.

GT vs MI Qualifier 2 போட்டியில் பல கிரிக்கெட்டர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அதேபோல, குஜராத் அணிக்காக அந்த அணியின் கிரிக்கெட்டர்கள் ஆடிய அற்புதமான ஆட்டத்தின் சில நினைவுகள் இவை.

சிறந்த பந்துவீச்சு
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மோஹித் ஷர்மா அகமதாபாத், 2023 (5/10)

முகமது ஷமி vs DC, அகமதாபாத், 2023 (4/11)

முகமது ஷமி vs SRH, அகமதாபாத், 2023 (4/21)

ரஷித் கான் vs LSG, புனே, 2022 (4/24)

ஐபிஎல் தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் மூன்றாவது அணியாகும். 

ஐபிஎல் பிளேஆஃப்களில் அதிக தனிநபர் ஸ்கோரை அடித்தவர் ஷுப்மான் கில்
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் குவாலிபையரில்129

வீரேந்திர சேவாக் (PBKS) vs CSK, மும்பை WS, 2014 Q2 – 122

ஷேன் வாட்சன் (CSK) vs SRH, மும்பை WS, 2018 இறுதி – 117*

விருத்திமான் சாஹா (பிபிகேஎஸ்) எதிராக கேகேஆர், பெங்களூரு, 2014 இறுதி – 115*

 
மோஹித் ஷர்மா: ஐபிஎல் பிளேஆஃப்களில் சிறந்த பந்துவீச்சு
ஆகாஷ் மத்வால் (MI) vs LSG, சென்னை, 2023 எலிமினேட்டர் – 5/5

மோஹித் ஷர்மா (ஜிடி) எதிராக எம்ஐ, அகமதாபாத், 2023 Q2 – 5/10

டக் பொலிங்கர் (CSK) vs டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை (DYP), 2010 SF – 4/13

ஜஸ்பிரித் பும்ரா (MI) vs DC, துபாய், 2020 Q1 – 4/14

தவால் குல்கர்னி (GL) எதிராக RCB, பெங்களூரு, 2016 Q1 – 4/14

இந்த சீசனில் டெத் ஓவர்களில் அதிக விக்கெட்டுகள்
மதீஷா பத்திரன (CSK) – 16

மோஹித் சர்மா (ஜிடி) – 14

ஹர்ஷல் படேல் (ஆர்சிபி) – 11

துஷார் தேஷ்பாண்டே (சிஎஸ்கே) – 11

யுஸ்வேந்திர சாஹல் (ஆர்ஆர்) – 11

ஐபிஎல் பிளே ஆஃப் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை அடித்தவர் கில்
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் அகமதாபாத், 2023 க்யூ2 (10)

விருத்திமான் சாஹா (பிபிகேஎஸ்) எதிராக கேகேஆர், பெங்களூரு, 2014 இறுதி (8)

கிறிஸ் கெய்ல் (RCB) vs SRH, பெங்களூரு, 2016 இறுதி (8)

வீரேந்திர சேவாக் (PBKS) vs CSK, மும்பை WS, 2014 Q2 (8)

ஷேன் வாட்சன் (CSK) vs SRH, மும்பை WS, 2018 இறுதி (8)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.