புனே:’ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள்’ நிறுவனம், அதன் மூன்றாவது எடிஷன் ‘ஐபெக்ஸ் ட்ரையல்’ என்ற இமயமலை சாகச பயணத்தை வாடிக்கையாளர்களுக்காக அறிவித்துள்ளது. இந்த பயணம், ஜூலை 13ல் இருந்து 23ம் தேதி வரை, கிட்டத்தட்ட 11 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
அதாவது, ஹிமாச்சலபிரதேசத்தின் மனாலி பகுதியில் இருந்து 17 ஆயிரத்து 480 அடியில் இருக்கும் லடாக் யூனியன் பிரதேசத்தின் ஷான்ஸ்கர் பகுதிக்கு சென்று திரும்புவது தான், இந்த பயணத்தின்நோக்கம்.
குறிப்பாக, ஜாவா யெஸ்டி சாகச பைக்குகளில் மேற்கொள்ளப்படும் இந்த பயணம், 1,132 கி.மீ.,துாரத்திற்கு நீடிக்கிறது.
கரடுமுரடான பாதைகள், மூச்சடைக்க வைக்கும் பள்ளத்தாக்குகள், ஆபத்தான மலை மற்றும் சேற்றுப் பாதைகள், மிரள வைக்கும் திருப்பங்கள், ஆற்றை கடக்கும் பாதைகள், குளிர் பாலைவன மணல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கடக்கும் வகையில் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பயணத்திற்கு, வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தங்கும் இடம், உணவு, மருந்து, வாகன தொழில்நுட்பவியலாளர் வசதி உட்பட அனைத்து வசதிகளையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்குகிறது இந்நிறுவனம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement