பெங்களூரு:பெங்களூரில் ‘இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் 2023’ டெர்ட் பைக் ரேஸின் முதல் சுற்று நடைபெற்றது. இதில், நடத்தப்பட்ட மூன்று பிரிவுகளிலும், பெட்ரோனாஸ் டி.வி.எஸ்., ரேசிங் குழுமமே முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
அதாவது, 450 சி.சி., பாரின் ஓப்பன் கிளாஸ் பரிவில், ராஜேந்திரனும், 260 சி.சி., இந்தியன்எக்ஸ்பெர்ட் கிளாஸ் பிரிவில் இம்ரான் பாஷாவும், 210 சி.சி., ஸ்கூட்டர் பிரிவில்,ஆஸிப் அலியும் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்த சுற்றின் முடிவில், சிறந்த ரேஸிங் குழு என்ற விருதை பெட்ரோனாஸ் டி.வி.எஸ்., ரேஸிங் குழுமம் பெற்றது. அதே, சிறந்த ஓட்டுனர் என்ற விருதை,இந்த ரேஸிங் குழுமத்தை சேர்ந்த ராஜேந்திரன் வென்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement