Samsung முதல் நோக்கியா வரை இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தவிரக்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளது. அதிலும் டிஜிட்டல் துறையில் வளர்ச்சி அடைய அடைய ஸ்மார்ட்போன்கள் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. இப்படி இருக்க அனைவரும் ஸ்மார்ட்போன்கள் வாங்கவேண்டும் என்றால் குறைவான விலையில் அவை கிடைக்கவேண்டும்.

இதற்காகவே பட்ஜெட் செக்மென்ட் போன்கள் பலவற்றை முன்னனி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிமுகம் செய்து விற்பனை செய்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் இருந்தாலும் நாம் தினசரி பயன்படுத்த சிறந்த போன்களாக இருக்க தேவையான அனைத்து வசதிகளையும், அம்சங்களையும் கொண்டிருக்கும்.
​Nokia C32இந்த நோக்கியா நிறுவனத்தின் போன் 8,999 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது. இதில் சிறந்த டிசைன், உண்மையான stock Android OS, சிறப்பு வசதிகள், சிறந்த கேமரா வசதி, IP52 பாதுகாப்பு ரேட்டிங், 3 நாட்கள் நீடிக்கும் பேட்டரி என பல வசதிகள் இருப்பதால் இந்த செக்மென்ட்டில் சிறந்த தேர்வாக இருக்கும்.​Redmi A2உங்களுக்கு இன்னும் குறைந்த விலையில் போன் வேண்டும் என்றால் இந்த 6,299 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் ரெட்மி A2 ஸ்மார்ட்போனை வாங்கலாம். இதில் செக்மென்ட்டிலேயே சிறந்த வசதிகளாக 6.52 இன்ச் HD+ டிஸ்பிளே, Helio G36 Octa Core சிப், 5000mAh பேட்டரி, இரண்டு நாட்கள் நீடிக்கும் பேட்டரி வசதி உள்ளது. முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த போனை தேர்வு செய்யலாம்.Samsung Galaxy M04சாம்சங் நிறுவனத்தின் விலை குறைந்த இந்த ஸ்மார்ட்போன் 8,499 ஆயிரம் ரூபாயில் கிடைக்கிறது. சாம்சங் பிராண்ட் போன் வாங்கவேண்டும் என்ற ஆசை இருந்தால் உங்களுக்கான போன் இதுதான்.இந்த போனில் 6.5 இன்ச் HD+ டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, USB Type C பாஸ்ட் சார்ஜிங் வசதி, டூயல் கேமரா, 1080P வீடியோ ரெகார்ட் வசதி என மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் இது அடக்கியுள்ளது.Motorola E13இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் இந்த செக்மென்ட்டில் நோக்கியா போனை போலவே உண்மையான Stock Android OS வசதியுள்ள ஒரே போன் ஆகும். இதில் 6.5 இன்ச் டிஸ்பிளே வசதி, 5000mAh பேட்டரி, 10W பாஸ்ட் சார்ஜிங், USB Type C போர்ட் வசதி என அனைத்தும் 10 ஆயிரம் ரூபாய் விலைக்கு கிடைக்கிறது.​Lava Blaze 2மேலுள்ள வெளிநாட்டு நிறுவனங்களை எல்லாம் எதிர்கொள்ளும் ஒரே இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனம் Lava மட்டுமே. இந்த நிறுவனத்தின் Blaze 2 ஒரு அங்கீகரிக்கப்படாத போன் என்றே கூறலாம். இதில் மிட் ரேஞ்சர் போன்களை போலவே 6GB RAM, 128GB ஸ்டோரேஜ் வசதி, Unisoc T616 சிப், 6.5 இன்ச் HD + டிஸ்பிளே, 90HZ refresh rate, 5000mAh பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங் என அனைத்து வசதிகளும் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.