சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டம் அதிக வெப்பநிலை உள்ள காலமான அக்னி நட்சத்திரம் என்று கத்திரி வெயில் என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை மாதம் 21ஆம் தேதி தொடங்கி வைகாசி 14ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. அதன்படி கடந்த மே 4ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் தமிழக முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது.
அந்த வகையில் சென்னை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்பட்டது. ஆனாலும் இந்த ஆண்டு குறிப்பிட்ட சில இடங்களில் மழை பெய்தால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும் என கூறப்படுகிறது.