தனது சொந்த பிரச்சினையை கட்சியின் பிரச்சினையாக அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றி வருவதாக பல விமர்சனங்கள் அவர் மீது எழ தொடங்கியுள்ளது. ஆட்சியை நெருக்கடியில் தள்ள மத்திய அரசுக்கு இவரே ரூட் போட்டு கொடுப்பதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.
டாஸ்மாக் வசூல்திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் புகார்கள் இருந்து வருகிறது. இருப்பினும், டாஸ்மாக் துறையில் அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி யின் கீழ் இயங்கி வரும் ‘ கரூர் கம்பெனி’ ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளில் இருந்து மாதா மாதம் கட்டாய கமிஷன் வாங்குவதாக டாஸ்மாக் ஊழியர்களே பகிரங்கமாக குற்றசாட்டு வைத்தனர். அதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பிரமாண்ட வீடுஇந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பிலும் கேள்வி கேட்கப்பட்டு பின்னர் அது குடிமகன்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. வலைத்தளங்களில் விவாதமானது. இதற்கு மத்தியில் அமைச்சர் செந்தில்பாலாஜி சொந்த ஊரில் பிரமாண்ட அரண்மனையை கட்டி வருவதாக சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பகீர் கிளப்பினார். அந்த நிலத்தின் பரப்பளவு 3.5 ஏக்கர் என்றும் நிலம் மட்டும் 80 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது என்றும் அந்த இடத்தை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் வாங்கப்பட்டு வீட்டிற்கு “நிர்மலா இல்லம்” என்று பெயரிடப்பட்டுள்ளது எனவும் புகைச்சலை கிளப்பினார் சவுக்கு சங்கர். அந்த குற்றச்சாட்டிற்கு இதுவரை சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஐடி ரெய்டுஇந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். ஆனால், அந்த வீடு திறக்கப்படாததால் அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தனர். பின்னர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு மிரட்டி அனுப்பி வைக்க முயற்சித்தனர். மேலும், அதிகாரிகளின் காரை சூறையாடினர். பொதுவாக வருமான வரி சோதனைகளின்போது அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபவது வழக்கம். ஆனால், செந்தில்பாலாஜி விஷயத்தில் வருமானவரி அதிகாரிகளின் காரே உடைக்கப்பட்டுள்ளது. மேலும், சிலர் தாக்கப்பட்டுள்ளனர். இதை மத்திய அரசு உற்று கவனித்து கொண்டிருக்கிறது. அதன்படி, வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக திமுகவினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஆப்சென்ட்இந்த பரபரப்பான சூழலில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இல்லை. முதலீடுகளை ஈர்க்க ஜப்பான், சிங்கப்பூருக்கு அவர் சென்றுள்ளதால் கரூர் களேபரத்தில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு செந்தில் பாலாஜியை ஆப் செய்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்த வருமான வரி சோதனை நேரிடையாக செந்தில்பாலாஜியின் வீட்டில் நடக்கவில்லை. அவரது குடும்பத்தினர் வீடு மற்றும் சில தொழிலதிபர்களின் வீடுகளில் நடந்துள்ளதால் அதை கட்சி பிரச்சினையாக செந்தில்பாலாஜி கம்பெனி மாற்றியது திமுக தலைமைக்கு டென்சன் ஏறியுள்ளது. இதற்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ‘ இனிமேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருந்தால், அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சிறைக்கு அழைத்துச் செல்வார்’ என கூறி பரபரப்பை கிளப்பினார்.ஆட்சியை இழக்கும் ஸ்டாலின்இந்த விஷயங்களை கூர்ந்து கவனித்து வரும் பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கரின் இன்றைய ட்விட்டர் பதிவு கவனம் பெற்றுள்ளது. அதில் ‘ அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சொந்த பிரச்சினையை திமுக பிரச்சினையாக மாற்றியுள்ளளார். பாதி திமுக செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 70 சதவீத அரசு அதிகாரிகள் செந்தில்பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இந்த சூழலில் ஸ்டாலின் பதவி பறிபோனாலும் வியப்பதற்கு இல்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும் திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் ‘ திமுகவில் பல மூத்த தலைவர்களும், திறமைசாலியான நிர்வாகிகளும் இருக்கும்போது கரூர் கேங்கை மட்டும் முதல்வர் ஏன் அவ்வளவு நம்புகிறார் என்று தெரியவில்லை’ என கலக்கமாக தெரிவித்தார்.