சென்னை : கணவரைப் பிரிந்து வாழும் அந்த அழகு நடிகை தனது பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருக்க புது டெக்னிக்கை பயன்படுத்தி வருகிறார்.
பால் போல் தேகம் கொண்ட அந்த அழகு நடிகை சினிமாவில் என்ட்ரி கொடுத்ததே சர்ச்சையான படம் என்பதால், இவர் திரைத்துறையில் நுழைந்தது முதல் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இவர் நடித்த முதல் படம் சர்ச்சைப்படமாக இருந்தாலும், அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
கணவரை பிரிந்தார்:
படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே திருமணம் செய்து கொண்ட இவர், இரண்டே வருடத்தில் திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து, மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் பல நடிகர்களுடன் கிசுகிசுவில் பேசப்பட்டார்.
ஆண் நண்பர்களுடன் பார்ட்டி :
அதோடு மட்டுமில்லாமல் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அவ்வப்போது சரக்கு பார்ட்டி, டான்ஸ், போட்டோஷூட் லூட்டி அடித்துக்கொண்டு இருந்தார். அழகு நடிகை குறித்து அவ்வப்போது பரவிய செய்தியால் நடிகையின் பெயர் மொத்தமும் கெட்டுவிட்டது. மேலும், பட வாய்ப்பை பெற இப்படி எல்லாம் அநாகரீகமாக நடந்து கொள்வதாக கூறப்பட்டது.

ரகசிய திருமணம்:
நடிகையின் இதுபோன்ற செயலால் ரசிகர்கள் அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர். இதனால், சினிமாவில் இவருக்கு என்று இருந்த கொஞ்ச பெயரும் கெட்டுபோய் படவாய்ப்பை இழந்தார். கடைசியாக இந்த அழகு நடிகை, ரகசியமாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்ற சர்ச்சையிலும் சிக்கினார்.
புது டெக்னிக் :
இந்நிலையில் அண்மைக்காலமாக அழகு நடிகை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தனக்கென புது டெக்னிக்கை பாலோ செய்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பொது இடத்தில் ஆண் நண்பர்களை சந்தித்தால் தானே பிரச்சனை ஏற்படும் என தெரிந்து கொண்ட நடிகை, தனது பிரியமான நண்பர்களுக்கு ரகசியமாக பார்ட்டிக் கொடுத்து லூட்டி அடித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.
விவரமான நடிகை :
இதனால் அழகு நடிகைக்கு தற்போது ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வருவதால், இந்த டெக்னிக்கை பயன்படுத்தி இழந்த நல்ல பெயரை மீட்டு மீண்டும் முன்னணி நடிகையாக வேண்டும் என முடிவு செய்து அழகாக காய்களை நகர்த்தி வருகிறார் அந்த அழகு நடிகை. இதை தெரிந்து கொண்ட கோலிவுட் இந்த நடிகை நல்லவிவரம் தான் என கூறிவருகின்றனர்.