சேலம் அம்மாப்பேட்டை அருகே கார் பட்டறையில் அழுகிய நிலையில் 7 வயது சிறுவன் சடலம் மீட்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் உள்ள ரஷ்யா காலனி பகுதியில் மாணிக்கம் என்பவர் கார் பட்டறை நடத்தி வருகிறார்.
நேற்று பிற்பகலில் மாணிக்கம் பட்டறைக்கு சென்ற போது அங்கு 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதான கார் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனை அடுத்து அந்த காரை திறந்து பார்த்த போது அழுகிய நிலையில் 7 வயது சிறுவன்சடலமாக கிடப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.