வேலூர் அருகே வருமானவரித்துறை அதிகாரிகள் என்ற பெயரில், கிருஸ்துவ மத போதகரின் வீட்டுக்குள் புகுந்த மோசடி கும்பலை போல போலீசார் தேடி வருகின்றனர்.
மோசடி கும்பலில் சென்னை சேர்ந்த வாலிபர் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கிருஸ்துவ பாதிரியார் லோவா பிரான்சிஸ் என்பவர் வீட்டில், அதிகாலை வருமானவரித்துறை அதிகாரிகள் போல் வேடமிட்டு எட்டு பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து உள்ளது.
அப்போது வீட்டில் இருந்தவர்களின் செல்போனை பறித்த அந்த கும்பல். சோதனை நடத்தும் முயற்சி ஈடுபட்டுள்ளனர்.
சுதாரித்துக் கொண்ட வீட்டில் இருந்தவர்கள், உங்களுடைய அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
அதற்கு அந்த மர்ம கும்பல் மதபோதகரை இழுத்து செல்ல முற்பட, அந்நேரம் மத போதகரின் மனைவி கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவரவே, ஏழு பேர் இரண்டு கார்களில் தப்பி ஓடிய நிலையில், சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் மற்றும் பிடிபட்டுள்ளார்.
அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடியவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் இறங்கி உள்ளனர்.
தான சேர்ந்த கூட்டம் படத்தில் நடிகர் சூர்யா தலைமையிலான திருட்டு கும்பல் வருமான பரிசோதனை என்ற பெயரில் கொள்ளை அடிப்பதுபோல், வேலூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது அம்மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.