சுதந்திர இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த டிசம்பர் 10, 2020ல் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (மே 28) காலை திறந்து வைத்தார். இதையொட்டி அனைத்து மத வழிபாடு நடத்தப்பட்டது.
மதிப்புமிக்க செங்கோல்
பின்னர் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் மோடி பொருத்தினார். முன்னதாக நாட்டின் முதல் குடிமகனாக விளங்கும், அரசியலமைப்பின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நபராக பார்க்கப்படும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தான் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
குடியரசு தலைவருக்கு நோ
ஆனால் மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. இந்த சூழலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்கள், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து இங்கே விரிவாக காணலாம்.