புல்லட் ரயிலில் பறந்த ஸ்டாலின்… டோக்கியோவிற்கு வெறும் 2.5 மணி நேரத்தில்!

தமிழக முதலமைச்சர்

9 நாட்கள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார். மேலும் வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழகத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து வருகிறார். இதையடுத்து வரும் மே 31ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

புல்லட் ரயிலில் ஸ்டாலின்

தற்போது ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், இன்று காலை புல்லட் ரயிலில் பயணம் செய்தார். ஒசாகா நகரில் இருந்து டோக்கியோ நகருக்கு புறப்பட்டார். இந்த ரயில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் அடைந்துவிடும். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் Bullet Train – களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்.

இந்தியாவிலும் புல்லட் ரயில் சேவை

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் ஒசாகா ரயில் நிலையத்தில் நிற்பது மற்றும் புல்லட் ரயிலில் பயணிப்பது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மும்பை முதல் அகமதாபாத் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

<p>MK Stalin at Osaka </p>

இந்தியா, ஜப்பான் கைகோர்ப்பு

இதற்காக ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்பை நாடியிருப்பது கவனிக்கத்தக்கது. இதற்கான அடிக்கல் கடந்த 2017ஆம் ஆண்டு போடப்பட்டது. தற்போது விறுவிறுவென வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு 1.1 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை டூ அகமதாபாத் புல்லட் ரயில்

மொத்தமுள்ள 508 கிலோமீட்டர் தூர ரயில் வழித் தடத்தை 8 பகுதிகளாக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ், பிகேசி மற்றும் ஷில்படா இடையிலான பகுதி, ஷிபடா மற்றும் ஸரோலி இடையிலான பகுதி, ஸரோலி மற்றும் வதோதரா இடையிலான பகுதி, வதோதரா, வதோதரா மற்றும் அகமதாபாத் இடையிலான பகுதி, அகமதாபாத், சபர்மதி பணிமனை ஆகியவை அடங்கும்.

<p>MK Stalin Bullet Train Travel</p>

வரும் 2026ஆம் ஆண்டு முதல்

மும்பை மற்றும் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் வழித்தடத்தில் தானே, விரார், பொய்சார், வாபி, பிலிமோரா, சூரத், பருச், வதோதரா, ஆனந்த்/நடியாட், சபர்மதி ஆகிய ரயில் நிலையங்கள் வரவுள்ளன. வரும் 2026 ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.