பெலாரஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை குஜராத் வரவழைத்து இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மின்க் (19) என்ற இளம்பெண்ணுக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் அகமதாபாத்தை சேர்ந்த மெஹேரியா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. முதலில் நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
அந்தப் பெண் தனது காதலரை சந்திக்க பெற்றோரிடம் ரஷ்யா செல்வதாக கூறி இந்தியா வந்து மெஹேரியாயை சந்தித்துள்ளார். அகமதாபாத்தில் இருவரும் ஒரு அடுக்குமாடி வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர்.
சில நாட்களில் இருவருக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மெஹேரியா அந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அங்கிருந்து அந்தப் பெண் வெளியேற முயன்றார்.
ஆனால் அவரை வெளியேற விடாமல் மெஹேரியா அவரின் போனை உடைத்துள்ளார். அவரிடமிருந்த 2 ஆயிரம் அமெரிக்க டாலரை பறித்துக்கொண்டு, அவரின் பாஸ்போர்ட்டையும் எடுத்துவைத்துக்கொண்டார்.
அந்த பெண் தன்னிடமிருந்த லேப்டாப் மூலம் இங்குள்ள ரஷ்ய நண்பர்களுக்கு தன்னுடைய நிலை குறித்து தெரியப்படுத்தி தன்னுடைய இருப்பிடத்தையும் கூறியுள்ளார். பெண்ணின் நண்பர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டனர்.
அந்த பெண் மெஹேரியா மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அந்த பெண்ணை பெலாரஸ் நாட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
newstm.in