கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பூர்பா மெதினிபூர் மாவட்டம் எக்ரா பகுதியில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் கடந்த 16-ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் 9 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2.5 லட்சம் நிதியுதவி மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா அறிவித்தார்.
இந்நிலையில், மம்தா நேற்றுகூறும்போது, ‘‘எக்ரா சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தலைமை செயலர் தலைமையில் ஒரு குழு தீவிர ஆய்வு செய்து 2 வாரங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக பசுமை பட்டாசுகள் தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.