பெய்ஜிங்: சீனா சொந்தமாக உருவாக்கி உள்ள பயணிகள் விமானம் இன்று முதல் சேவையை துவங்கியது.
சீனா முதன்முறையாக உள்நாட்டிலேயே சி919 என்ற பெயரில் புதிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 160 பேர் பயணிக்க முடியும். இதில் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் மற்றும் குறைந்த இயக்கச் செலவுகளை மேம்படுத்தும் முறை என பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.
ஏர்பஸ், போயிங் நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட இந்த விமான சேவை இன்று துவங்கியது. ஷாங்காயின் ஷாங்கியாவோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 130 பயணிகளுடன், பீஜிங்கிற்கு விமானம் பயணித்தது.
இதற்காக, விமான நிறுவனத்திற்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement