ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், டாக்ஸ் e: மற்றும் ஜூமர் e: என இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கும் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. சமீபத்தில் ஹோண்டா CBR250RR மற்றும் CL300 ஸ்கிராம்பளர் என இரு மாடல்களை வடிவமைப்பின் காப்புரிமை பதிவு செய்திருந்தது.
குறிப்பாக, Dax e: மற்றும் Zoomer e: என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பயன்பாடினை பொறுத்தவரை வர்த்தகரீதியான பயன்பாடுகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், குறைந்த தொலைவு பயணிப்பவர்களுக்கு ஏற்றதாக விளங்குகின்றது.
Honda Dax e: and Zoomer e: electric scooter
டாக்ஸ் e: மற்றும் ஜூமர் e: என இரு மாடல்களும் போஸ் ஹப் மோட்டார் வழங்கப்பட்டு 80km/charge ரேஞ்சு பெற்று அதிகபட்ச வேகம் 25kmph ஆக உள்ளது.
ஹோண்டாவின் மின்சார ஸ்கூட்டர்கள் B2B சந்தைக்கு ஏற்றதாக இருக்கலாம். மற்ற அம்சங்களை பொறுத்தவரை, எல்இடி ஹெட்லேம்ப் டெயில் விளக்குகள், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிஸ்ட்டர் மற்றும் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்கு அம்சங்களுடன் வருகிறது.
இந்த இரு மாடல்களின் அறிமுகம் குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. வடிவங்களை தக்கவைத்துக் கொள்ள காப்புரிமை கோரியிருக்கலாம். இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 2024 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிட உள்ளது.