புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் 2ம் கட்ட நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரின் உரை வாசிக்கப்பட்டது. இதனை ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஸ் வாசித்தார்.
அதில் இடம்பெற்ற ஜக்தீப் தங்கரின் உரை:
புதிய பார்லிமென்ட் கட்டடம் இந்தியாவிற்கு பெருமை. இந்திய பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இணைந்த கலவையாக புதிய பார்லிமென்ட் உள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரை
நமது ஜனநாயக பயணத்தில் புதிய பார்லிமென்ட் ஒரு படிக்கட்டு. இது நமது நாட்டின் லட்சியத்திற்கும், பெருமைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. புதிய பார்லிமென்ட்டை பிரதமர் திறந்து வைப்பது மகிழ்ச்சி. ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது என்பதை புதிய பார்லிமென்ட் கட்டடம் வெளிப்படுத்துகிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் தருணம் இது.
வரவேற்புரை
முன்னதாக, ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஸ் ஆற்றிய வரவேற்புரை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 2.5 ஆண்டுகளுக்கும் குறைவான நாட்களில் புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிற்கு இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். இந்நாள் அமிர்த காலத்திற்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது. இக்கட்டடம், மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. பாரம்பரிய முறைப்படி நவீன வசதிகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement