இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ரஜினி நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கி தற்போது முடிவடைந்துள்ளது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் இருக்கும் பல ஊர்களில் லைவ் லொகேஷனில் இப்படம் படமாக்கப்பட்டது.
படத்தில் பெரும்பாலான காட்சிகள் லைவ் லொகேஷனில் படமாக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யமான விஷயமாக தெரிகின்றது. ஏனென்றால் கடந்த பல ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் படம் பெரும்பாலும் செட்டிலேயே படமாக்கப்பட்டு வந்தது. இந்த சமயத்தில் ஜெயிலர் படத்தில் பல காட்சிகளை நெல்சன் லைவ் லொகேஷனில் கஷ்டப்பட்டு படமாக்கியுள்ளார்.
Rajini: ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த ஜெயிலர்..தன் கெத்தை நிரூபித்த தலைவர்..!
படம் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காகவே நெல்சன் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதன் அறிவிப்பு ஒரு சில வாரங்களுக்கு முன்பே படக்குழுவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் துவங்கிய போது இருந்ததை விட தற்போது ஜெயிலர் படத்தின் மீது ரசிகர்களுக்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதற்கு மிக முக்கியமான காரணம் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தான்.
ரஜினியுடன் படையப்பா படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு மல்டி ஸ்டாரர் படமாக இப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ஷிவ்ராஜ்குமாரின் கதாபாத்திரம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஜெயிலர் படத்தில் ரஜினி ஜெய்லராக நடிக்கின்றார் என நாம் அனைவர்க்கும் தெரியும். அப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் இருந்து சில கைதிகள் கர்நாடகாவிற்கு தப்பி செல்கின்றனர். அவர்களை பிடிக்க ரஜினி கர்நாடகாவிற்கு செல்கின்றார். அங்கெ கர்நாடகாவில் ஷிவ்ராஜ்குமார் மிகப்பெரிய டானாக வலம் வருகின்றார். எனவே அவரின் உதவியுடன் ரஜினி கைதிகளை எப்படி பிடிக்கிறார் என்பது தான் ஜெயிலர் படத்தின் கதை என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக ஷிவ்ராஜ்குமாருக்கே முக்கியத்துவம் கொடுப்பட்டதாகவும் தெரிகின்றது. ஆனால் இத்தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது படம் வெளியான பின்னரே தான் தெரியவரும்.