Sundar Pichai: கஷ்டப்பட்டு கட்டினதுபா: நடிகருக்கு வீட்டை விற்றபோது அழுத கூகுள் சிஇஓ சந்தர் பிச்சையின் அப்பா

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
எந்த விபரம் வேண்டுமானாலும் கூகுளில் தேடி கண்டுபிடித்துவிடலாம்.
கூகுள்
இல்லாமல் வாழ்க்கை இல்லை என்கிற அளவுக்கு பலர் அதை சார்ந்திருக்கிறார்கள். அனைத்தையும் தெரிந்தவர்களை கூகுள் என்று சொல்கிறார்கள். அப்படி மக்களின் வாழ்க்கையில் ஒரு பங்காக இருக்கும் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஒரு தமிழர்.

விஜய்யை புகழ்ந்த மிஸ்கின்!
மதுரையை சேர்ந்த சுந்தர் பிச்சை தான் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. அவர் சென்னையில் வளர்ந்த வீடு விற்பனைக்கு வந்தது.

சுந்தர் பிச்சையின் வீடு என்பதால் அதை வாங்க பலரும் போட்டி போட்டார்கள். இறுதியில் நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டனுக்கு தான் அந்த வீடு கிடைத்திருக்கிறது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சென்னை அசோக் நகரில் இருக்கும் அந்த வீட்டில் தங்கி தான் பள்ளியில் படித்தார் சுந்தர் பிச்சை. அந்த வீட்டை மணிகண்டனுக்கு விற்பனை செய்தார் சுந்தர் பிச்சையின் அப்பா. மேலும் வீட்டை தன் செலவிலேயே இடித்தும் கொடுத்திருக்கிறார்.

அது குறித்து மணிகண்டன் கூறியதாவது,

சென்னையில் வீடு வாங்க வேண்டும் என தேடிக் கொண்டிருந்தேன். அந்த வீடி வழியாக பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் அது சுந்தர் பிச்சையின் வீடு என எனக்கு தெரியாது.

அசோக் நகரில் வீடு தேடுகிறாயே ஒரு இடம் இருக்கு வாங்குகிறாயா என நண்பர் கேட்டார். யார் வீடு என்று கேட்டதற்கு கூகுள் சுந்தர் பிச்சை வீடு என்றார். அப்படித் தான் அந்த வீடு பற்றி எனக்கு தெரிந்தது என்றார்.

அந்த வீட்டின் நிலைமையை பார்த்த மணிகண்டன் அதை இடித்து புதிதாக கட்ட முடிவு செய்தார். இதையடுத்து தன் சொந்த செலவிலேயே வீட்டை இடித்துக் கொடுத்திருக்கிறார் சுந்தர் பிச்சையின் அப்பா.

பிப்ரவரி 2ம் தேதி அந்த வீட்டை மணிகண்டனின் பெயருக்கு மாற்றியிருக்கிறார்கள். ஆனால் சுந்தர் பிச்சையின் வீடு மணிகண்டனிடம் வந்தது தற்போது தான் தெரிய வந்துள்ளது.

Karthi: செம சண்டை: தரையில் கட்டி உருண்ட சூர்யா, கார்த்தி

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சுந்தர் பிச்சையின் அப்பாவும், மணிகண்டனும் சென்றபோது ஒரே கூட்டமாக இருந்திருக்கிறது. வந்திருப்பது யார் என்பதை சொன்னால் வரிசையில் நிற்காமல் செல்லலாம். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் செய்யக் கூடாது. வரிசையில் காத்திருந்தே போவோம் என்று மணிகண்டனிடம் கூறியிருக்கிறார் சுந்தர் பிச்சையின் அப்பா.

வீட்டை விற்றபோது சுந்தர் பிச்சையின் அப்பா அழுதிருக்கிறார். அவர் ரொம்ப கஷ்டப்பட்டு, லோன் வாங்கி கட்டிய வீடு அது என்பதால் மணிகண்டன் பெயருக்கு வீட்டை எழுதிக் கொடுத்தபோது எமோஷனலாகி அழுதிருக்கிறார்.

அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும் தான் கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை கொடுத்தபோது சுந்தர் பிச்சையின் தந்தையால் அழாமல் இருக்க முடியவில்லை. வீட்டை வேறு ஒருவரிடம் கொடுத்தபோது அந்த சென்டிமென்ட் எல்லாம் கண் முன்பு வந்து போயிருக்கிறது.

யாருக்கு தான் அழுகை வராமல் இருக்கும். என்ன தான் பெரிய பணக்காரராக ஆகிவிட்டாலும் கஷ்டப்பட்டு கட்டிய முதல் வீடு எப்பொழுதுமே ஸ்பெஷல் தானே.

Keerthy Suresh: திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி: அந்த ‘தக்’ பதில் தான் அல்டிமேட்

இதற்கிடையே மகன் பெரிய நிறுவனத்தின் சி.இ.ஓ. என்கிற பந்தா இல்லாமல் இன்னும் சாதாரணமாக நடந்து கொள்வது தான் சுந்தர் பிச்சை அப்பாவின் ஸ்பெஷல் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.