அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயில், அசாமின் கவுகாத்தி நகரையும், மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுதிரி நகரையும் இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது.
411கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் ஐந்தரை மணிநேரத்தில் இந்த ரயில் கடந்து செல்லும். மேற்கு வங்கத்தில் 3வது ரயிலாகவும், தேசிய அளவில் 18வது ரயிலாகவும் இது இருக்கும்.
வாரத்தில் 6 நாட்கள் இயங்கக்கூடிய இந்த ரயிலானது நியூ அலிபுர்துவார், கோக்ரஜார், நியூ போங்கைகான், காமக்யா, நியூ ஜல்பைகுரி, கவுகாத்தி என 6 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.