சென்னை : நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மலையாள நடிகையான நவ்யா நாயகர் இஷ்டம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மலையாள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
நடிகை நவ்யா நாயர் :
மலையாளத்தில் பல படங்களில் நடித்து சிறந்த நடிகை என பெயர் எடுத்த நவ்யா நாயர், ராதா மோகன் இயக்கத்தில் உருவான அழகிய தீயே என்ற படத்தில் பிரகாஜ் ராஜ், பிரசன்னாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி,பாச கிளிகள், அமிர்தம், மாய கண்ணாடி, சில நேரங்களில், ராமன் தேடிய சீதை என தமிழில் பல படங்களில் நடித்திருந்தார்.
திருமணம் :
2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடித்து வந்தார். குழந்தை பிறந்ததை அடுத்து படங்களில் நடிப்பதில் இருந்து மொத்தமாக விலகி, குழந்தை குடும்பம் என்று சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்தார்.
புதிய படத்தில் :
தற்போது இவர் ஜானகி ஜானே என்ற படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் ஜானகி என்ற லீட் ரோலில் நடித்துள்ளார். இத்திரைப்படம் மே12ந் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
மருத்துவமனையில் :
இந்நிலையில், நடிகை நவ்யா நாயர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜானகி ஜானு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு பகுதிக்கு சென்று வந்தார். அந்த வகையில், சுல்தான் பத்தேரி பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, நவ்யாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
சோகத்தில் ரசிகர்கள் :
உணவு ஒவ்வாமை காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நவ்யா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். அவர் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.