சென்னையில் ஆட்டோ ஓட்டுநரை ஓட, ஓட விரட்டி பட்டா கத்தியால் வெட்டிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக்(24). இவர் மேற்கு மாம்பலம் பகுதியில் ஆட்டோ ஓட்டிச்சென்றபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகளான மகேஷ், கொட்டா கார்த்திக் ஆகியோர் கார்த்திக்கின் ஆட்டோவை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளனர்.
ஆனால் கார்த்திக் பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த இருவரும் கார்த்திகையை ஓட, ஓட விரட்டி பட்டா கத்தியால் வெட்டியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் திரண்டு வந்ததால், இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து பலத்த காயமடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொப்பி ஓடிய ரவுடிகளான மகேஷ் மற்றும் கொட்டா கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.