சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இருநாட்டு நல்லுறவு என்பது சமநிலையில் ஏற்பட வேண்டும் என்றும் அடுத்த நாட்டின் விருப்பம் போல அமைய முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அனந்த் தேசிய பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய ஜெய்சங்கர், கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவுடனான எல்லைப் பிரச்சினை வெளிப்படையாக உள்ளது என்றார்.எல்லையில் அமைதி குறைந்தால் இருநாடுகளின் நல்லுறவு நீடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
எல்லையில் முந்தைய நிலையை சீனா மாற்றுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டுவருவதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.