புதிய நாடாளுமன்றத்தில் நேற்று நிறுவப்பட்ட செங்கோல் அலகாபாத்தில் உள்ள ஆனந்த பவனில் வாக்கிங் ஸ்டிக் போல் வைக்கப்பட்டிருந்தது அதற்கு இன்று தான் விமோஷனம் கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி நேற்று கூறியிருந்தார். பிரிட்டிஷாரிடம் இருந்து பத்திரங்கள் மூலம் பவரை வாங்காமல் செங்கோல் மூலமே பவர் வாங்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ்.-பாஜக உள்ளிட்ட சங் பரிவாரங்கள் கூறிவருகின்றன. நேருவிடம் வழங்கப்பட்ட அந்த பவர் நிரம்பிய செங்கோல் அவரது ஆனந்த பவன் இல்லத்தில் இவ்வளவுநாள் கேட்பாரற்று கிடந்ததுபோல் கூறிவருகின்றனர். 1947 ம் ஆண்டு […]