தற்போதைய தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. ஆனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட வில்லை என்று, விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாளவன், தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை, அரசியல் கொலைகள், கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், தேனியில் நடைபெற்ற சாதிய மோதல், கள்ளச்சாராயத்தில் 22 பேர் பலியானது உள்ளிட்ட சம்பவங்களை மேற்கோள் காட்டி, அதிமுக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதாக குற்றம் சாட்சி வருகின்றனர்.
இது குறித்து பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள திருமாவளவன், அடிக்கடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும், தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை என்றும் தெரிவித்து வருகிறார்.
ஆனால் அவர் கூறுவது போல் தமிழகத்தில் வன்முறை வெறியாட்டம் நடைபெறவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்படவில்லை.
ஆனால் அதற்காக இங்கே தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆங்காங்கே தலித்துகளுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன” என்று திருமாவளவன் தெரிவித்தார்