தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் வடக்கில் உள்ள மாநிலங்களுக்கு கூடுதல் கிடைக்கும். தெற்கு பின்னடைவை சந்திக்கும்.
புதிய நாடாளுமன்றம் கட்ட இத்தனை கோடி செலவா ?
பாஜக அரசியல் வியூகம்
இத்தகைய அரசியல் கணக்கு மூலம் வடக்கில் உள்ள மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தினாலே தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம். இதையொட்டியே பாஜக காய்களை நகர்த்தி வருவதாக கூறுகின்றனர். இது தமிழகத்திற்கு பலவிதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றும் விவகாரம் தொடர்பாக பேசிய
அமைப்பு செயலாளர்
, தமிழகத்தில் 1967க்கு முன்பு 41 மக்களவை உறுப்பினர்கள் இருந்தனர். அதன்பிறகு எண்ணிக்கையில் இரண்டு குறைக்கப்பட்டு 39ஆக மாறியது.
தமிழக எம்.பிக்கள் சீட்
இதற்கு குடும்ப கட்டுப்பாடு மூலம் மக்கள்தொகை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதே காரணம். இதற்கு விலையாக இரண்டு சீட்களை பறிகொடுத்தோம். இதேநிலை தான் கேரளாவிலும் ஏற்பட்டது. இந்த சூழலில் இந்தி பேசும் மக்களை மனதில் வைத்துக் கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கைகளை அதிகமாக இருக்குமாறு ஏற்பாடு செய்துள்ளனர். தென்னிந்தியாவை பொறுத்தவரை பாஜகவிற்கு சிறிதும் இடமில்லை. இதை கர்நாடகா மாநிலமும் சமீபத்தில் நிரூபித்து விட்டது.
ஸ்டாலின் உறுதி
திராவிட மண்ணில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்றும், இருக்கும் ஓரிரு இடங்களும் முழுவதுமாக அகற்றப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் மத்திய அரசின் முடிவால் அதிகம் பாதிக்கப்படப் போவது தென்னிந்தியா தான். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது 80 எம்.பிக்கள் இருக்கின்றனர். இது 143ஆக உயர்வதற்கு வாய்ப்புள்ளது.
வடக்கில் எண்ணிக்கை அதிகரிப்பு
இதேபோல் பிகாரில் உள்ள 40 எம்.பிக்கள் என்ற எண்ணிக்கை 71ஆக உயர வாய்ப்புள்ளது. இப்படி வடக்கில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டு, தமிழகத்தில் எண்ணிக்கையை குறைப்பது எந்த வகையில் நியாயம். மற்ற மாநிலங்களில் எந்த விகிதத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறதோ, அதேபோல் தமிழத்திலும் உயர்த்தப்பட வேண்டும்.
ஜி.எஸ்.டி சர்ச்சை
இதைவிட்டு விட்டு மக்கள்தொகை அடிப்படையில் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் சிறப்பான வளர்ச்சியுடன் செயல்பட்டு கொண்டிருக்கிற மாநிலங்களை பாதிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார். ஏற்கனவே ஜி.எஸ்.டி விஷயத்தில் தமிழக மக்கள்தொகையை காரணம் காட்டி தான் போதிய நிதியை விடுவிக்க மத்திய அரசு முன்வருவதில்லை. இதை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழகம் பாதிக்கும்
இத்தகைய சூழலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைந்தால் நிதி விஷயத்தில் பின்னடைவு ஏற்படும். இது வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும். மனித வளக் குறியீடுகளில் முன்னணியில் இருக்கும் தமிழகம் சறுக்கலை சந்திக்க வாய்ப்பு உண்டாகும். அதுமட்டுமின்றி மத்தியில் தமிழகத்திற்கான செல்வாக்கு குறையும். மாநில உரிமைகளை பெற்று தருவதில் மேலும் இழுபறி உண்டாகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.