துருக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று எர்டோகன், மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி ஜனாதிபதி தேர்தல்
துருக்கியில் கடந்த மே 15ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வேட்பாளரான எர்டோகன் 49.50 சதவீதம் வாக்குகளையும், கூட்டணி கட்சி வேட்பாளர் கெமால் கிளிக்ட்ரோக்லு 44.79 சதவீத வாக்குகளையும் பெற்று இருந்தனர்.
@afp
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் பெரும்பான்மை இல்லாததால், 2ஆம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர்.
@skynews
மேலும் நீண்டகாலமாக துருக்கியை ஆட்சி செய்யும் எர்டோகன், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா? ஆட்சி மாற்றம் நடைபெறுமா? என்ற எதிர்ப்பார்ப்புடன் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் துருக்கி ஜனாதிபதி தேர்தலில் தாயீப் எர்டோகன் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
எர்டோகன் வெற்றி
ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட கெமல் கிலிக்ட்ரோக்லு 47.8 சதவீத ஓட்டுகள் பெற்று, இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
@skynews
தனது 20 ஆண்டு கால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த வெற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
மேலும் துருக்கியிலிருந்த பிரதமர் பதவியை மாற்றி அமைத்து ஜனாதிபதி பதவியே, உச்சபட்ச பதவியென மாற்றி அதற்கு தேர்தல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
@skynews
இந்நிலையில் இவரது வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், ஜெலென்ஸ்கி, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.