துருக்கி: மத்திய கிழக்கு நாடான துருக்கியில் புதிய அதிபரைத் தேர்வு செய்யச் சமீபத்தில் தேர்தல் நடைபெற்று. இதில் ரெசெப் தயிப் எர்டோகன் 52.1% வாக்குகளைப் பெற்று வென்றார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாகத் துருக்கி உள்ளது. அந்நாட்டின் அதிபராக ரெசெப் தயிப் எர்டோகன் என்பவர் இருந்து வருகிறார். இதற்கிடையே அந்நாட்டின் அதிபரைத் தேர்வு செய்யத் துருக்கியில் தேர்தல் நடைபெற்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் துருக்கி நாட்டின் அதிபராக ரெசெப் தயிப் எர்டோகன் என்பவரே இருந்து வருகிறார். அதற்கு முன்பு 10 ஆண்டுகள் அவர் துருக்கி நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார்.
துருக்கி தேர்தல்:
இதனிடையே அந்நாட்டின் அதிபரைத் தேர்வு செய்ய மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் 52.1% வாக்குகளைப் பெற்று அவர் அதிபர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். இதன் மூலம் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தலைமை பொறுப்பைத் தக்க வைத்துக் கொண்டார். மீண்டும் தனக்கு வாய்ப்பு அளித்ததற்கு ரெசெப் தயிப் எர்டோகன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கருத்துக்கணிப்புகளில் ரெசெப் தயிப் எர்டோகன் தோல்வியடைவார் என்றே சொல்லப்பட்டது. இருப்பினும், அதையும் மீறி ரெசெப் தயிப் எர்டோகன் வெற்றி பெற்றார். ரெசெப் தயிப் எர்டோகனின் வெற்றியை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே, மேற்கத்திய நாடுகள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்குத் துருக்கி நாட்டு மோதல் போக்கையே கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் ரெசெப் தயிப் எர்டோகன் மீண்டும் வென்றுள்ளது நிலைமையை மோசமாக்கவே செய்கிறது.
துருக்கி பொருளாதாரம்:
இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான துருக்கி லிராவின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது. மேலும், அந்நாட்டின் பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களின் மதிப்பும் மளமளவெனச் சரிகிறது. வரும் காலத்தில் எர்டோகனின் நடவடிக்கையைப் பொறுத்தே துருக்கி பொருளாதாரம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையே நடுநிலையான ஒரு நிலைப்பாட்டையே எடுத்துள்ளது.. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது.. இருப்பினும் துருக்கியில் எர்டோகன் அரசு வரியைத் தொடர்ந்து குறைத்தே வருகிறது. அங்கே பணவீக்கம் 85%க்கும் அதிகமாக உயர்ந்துள்ள போதிலும், வட்டி விகதத்தை அந்நாட்டு அரசு தொடர்ந்து குறைத்தே வருகிறது.
இது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மேலும் பாதிக்கவே செய்கிறது. துருக்கியின் பொருளாதாரத்தைக் காக்க வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும் என்றே அந்நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள். இருப்பினும், அதற்கு நேர்மாறாக துருக்கி வட்டி விகதத்தைத் தொடர்ந்து குறைத்தே வருகிறது. இது அங்கு விலைவாசி உயர்வுக்கு மேலும் காரணமாக அமைகிறது.
பயங்கரவாத சட்டம்:
ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் சேர துருக்கி தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஸ்வீடன் நாடு புதிய பயங்கரவாத சட்டத்தை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அவர்கள் நேட்டோவில் இணைய ஸ்வீடனுக்கு அனுமதி தருவோம் என்ற நிலைப்பாட்டையே துருக்கி எடுத்துள்ளது. இதுவும் வரும் காலத்தில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
ஏனென்றால் உக்ரைன் போர் விவகாரத்தில் துருக்கி நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தச் சூழலில் துருக்கி என்ன முடிவை எடுக்கும் என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.