அகமதாபாத்: அப்ஸ்டாக்ஸ் மதிப்புமிக்க விருது வாங்கிய பிறகு, நான் மதிப்பு மிக்க வீரர் என்று அப்ஸ்டாக்கிற்கு தெரிகிறது. ஆனால் சில ரசிகர்களுக்கு தெரிவது இல்லை என்று ரவீந்திர ஜடேஜா கூறியிருந்தார். ஆனால், இன்று மீண்டும் தான் எந்த அளவு சென்னை அணிக்கு மதிப்பு மிக்க வீரர் என்பதை நிரூபித்துவிட்டார்.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5-வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறது. மழையால் 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்கா நிர்ணயிக்கப்பட்டது. மிகவும் பரபரப்பாக கடைசி பந்து வரை சென்ற இந்த போட்டியில் ஜடேஜா தனது அசத்தல் ஆட்டத்தால் வெற்றியை உறுதி செய்தார்.
அதாவது கடைசி இரண்டு பந்தில் மட்டும் 10 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விட்டனர். தொலைக்காட்சிகளிலும் செல்போன்களில் மேட்ச் பார்த்த ரசிகர்கள் கண்களை தட்டி முழிக்காமல் மேட்சை பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த பரபரப்பான நேரத்தில் ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
முன்னதாக பந்து வீச்சில் சுப்மான் கில்லை ஆட்டமிழக்க செய்தார். மொத்தத்தில் இறுதிப்போட்டியில் ஜடேஜாவின் பங்களிப்பு சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கியமாக மாறியது. ஐபிஎல் லீல் போட்டிகளில் தோனிக்கு முன்பாக இறங்கிய ஜடேஜேவை சீக்கிரம் அவுட் ஆகுமாறும் அப்போதுதான் தோனி களம் இறங்குவார் என்று மைதானத்தில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
இது குறித்து கூட கேலியாக சொன்ன ஜடேஜா, அப்ஸ்டாக்ஸ் மதிப்புமிக்க விருது வாங்கிய பிறகு, நான் மதிப்பு மிக்க வீரர் என்று அப்ஸ்டாக்கிற்கு தெரிகிறது. ஆனால் சில ரசிகர்களுக்கு தெரிவது இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், இன்று மீண்டும் தான் எந்த அளவு சென்னை அணிக்கு மதிப்பு மிக்க வீரர் என்பதை நிரூபித்துவிட்டார்.