பிரதமர் மோடியின் தலைமையில் பாஜகவின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் பங்கேற்ற உயர்மட்டக்கூட்டம் நேற்றிரவு டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, வளர்ச்சித் திட்டங்கள் அனைத்து குடிமக்களின் நலன்கள் குறித்து பாஜகவினருடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பல முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.