பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தது.
இதனை முன்னிட்டு இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9 ஆண்டு சாதனைகளையும் பணிகளையும் விளக்கி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் மூத்த பாஜக தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேச உள்ளனர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையிலும் மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் சென்னையிலும் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களிலும் மாநில பாஜக தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.