சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்வது, மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’கடந்த மார்ச்/ ஏப்ரல் மாதத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை நாளை 30.05.2023 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று […]