பெலாரஸ் அதிபர் லுக்காஷென்கோவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பாதிப்பு!

பெலாரஸ் அதிபர் லுக்காஷென்கோ மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து திரும்பும் போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பெலாரசின் எதிர்க்கட்சித் தலைவரர் வலேரி செப்காலோ தெரிவித்துள்ளார்.அவரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரும் நிலையில்,அவரது உடல் நலம் பற்றிய வதந்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

பெலாரசின் சர்வாதிகாரத் தலைவரான 68 வயதான லுக்காஷென்கோ அதிபர் புதினின் நம்பகமான நெருங்கிய நண்பராகக் கருதப்படுகிறார். அணு ஆயுதங்களை அண்மையில் ரஷ்யா பெலாரசுக்கு அனுப்பி வைத்தது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.