செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் பைக் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பொத்தேரி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருசக்கர வாகனம் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் மூன்று இளைஞர்கள் பைக் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இன்னொரு வீட்டில் பைக் திருடும்போது சத்தம் கேட்டு உரிமையாளர் வந்ததும் பைக்கை விட்டு விட்டு தப்பியோடுவதும் அவரை உரிமையாளர் விரட்டி செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.