சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தின் டப்பிங்கை தொடங்கி உள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் உருவாகிறது.
மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் :
இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் மாவீரன். சிவகார்த்திகேயன், அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர், நடிகர் சுனில், இயக்குநர் மிஸ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். பல வருடங்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த நடிகை சரிதா இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது :
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், சில நாட்களிலேயே சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், அது வெறும் வதந்தி படப்பிடிப்பு நடந்து வருவதாக சிவகார்த்திகேயன் விளக்கம் கொடுத்திருந்தார்.
ஜூலை 14ந் தேதி ரிலீஸ் :
இதையடுத்து, மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் படம் வெளியாவதால் மாவீரன் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு ஜூலை 14 ஆம் தேதி திரையில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
வீரமே ஜெயம் :
இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மாவீரன் திரைப்படத்தின் டப்பிங்கை சிவகார்த்திகேயன் தொடங்கி உள்ளார். இதுகுறித்து மாவீரன் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், சிவகார்த்திகேயன் வீரமே ஜெயம் என்று டப்பிங்கை பேசிஉள்ளார்.
படத்தின் டீசர் :
மாவீரன் திரைப்படம் தெலுங்கு மொழியில் மாவீரடு என்ற பெயரில் உருவாகி வருகின்றது. மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் 14ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில், மாவீரன் படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது