மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில்
காங்கிரஸ்
கட்சி மெகா வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 113 தொகுதிகளைக் காட்டிலு, 135 இடங்களில் வெற்றி பெற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. தென் இந்திய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலத்திலும் வெறும் 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பாஜக தோல்வியுற்று, தென் இந்திய மாநிலங்களில் முற்றிலுமாக துடைத் தெறியபட்டது.
அதைத் தொடர்ந்து முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவி ஏற்றனர். இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி நாடு முழுவதும் எதிரொலிக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். இந்தநிலையில் தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 2024 பொதுத் தேர்தலுக்கு முந்தைய தேர்தல் என்பதால் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால், இப்போது இருந்தே களச் செயல்பாடுகளை செய்ய காங்கிரஸ் நிர்வாகிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறும்போது, ‘‘வரவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. கர்நாடகாவில் எங்களுக்கு 135 தொகுதிகள் கிடைத்தது. மத்திய பிரதேசத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடிப்படை பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம்’’ என தெரிவித்தார்.
Southwest Monsoon : காத்திருக்கும் ஆபத்து… கொட்டப்போகும் வரலாறு காணாத மழை.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
முன்னதாக கடந்த 2018 தேர்தலில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இருப்பினும் எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவியதால் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சியமைத்தது. இந்தநிலையில் மாநிலத்தில் மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.