ஸ்ரீஹரி கோட்டா: GSLV F -12 ராக்கெட் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 10.42 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு என்ற கட்டமைப்பை உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்தது. ‘ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி’ செயற்கைக்கோளுக்கு மாற்றாக ‘என்.வி.எஸ்-01’ செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் […]