1.73 சீட்டுகளுக்கு 2.48 பேர் விண்ணப்பம்.. அரசு கலை, அறிவியல் கல்லூரி கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு முதல் நாளான இன்று நடைபெறுகிறது.

கடந்த மே 8 ஆம் தேதி தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் 164 அரசு கலை மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்த கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.73 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் மூலமாக கடந்த மே 8 ஆம் தேதி விண்ணப்பப்பதிவு தொடங்கியது. https://www.tngasa.in/ என்ற இணைய முகவரியில் ஏராளமான மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்காக கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தார்கள்.

1.73 லட்சம் இடங்களுக்கு சுமார் இரண்டரை லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1.15 லட்சம் மாணவர்களும், 1.28 லட்சம் மாணவிகளும், 3 ஆம் பாலினத்தவர்கள் 78 பேரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழ் மொழி படிப்புக்கு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு தனியாக தரவரிசைப் பட்டியல் ஒதுக்கப்பட்டது.

ஆங்கில மொழி கல்விக்கு ஆங்கில பாடத்தில் பெற்ற மதிப்பெண், மற்ற இளநிலை படிப்புகளுக்கு இதர 4 பாடங்களில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

Counseling for Tamilnadu government Arts and Science college starts today

முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினர் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. ஜூன் 1 முதல் 10 ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12 முதல் 20 ஆம் தேதி வரை 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

ஜூன் 31 ஆம் தேதி கலந்தாய்வு நிறைவடைய இருக்கும் நிலையில், இதில் சீட் பெறும் மாணவர்களுக்கு ஜூன் 22 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க இருக்கின்றன.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.