தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. மேலும் பல படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கியுள்ளார். அண்மையில் இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது தான் சோஷியல் மீடியா முழுக்க வைரலானது. இந்நிலையில் தனது இரண்டாம் திருமணத்திற்கான காரணம் குறித்து பேசியுள்ளார் ஆஷிஷ் வித்யார்த்தி.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ரஜினியின் பாபா மற்றும் விஜய்யின் கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஆஷிஷ் வித்யார்த்தி. விக்ரமின் தில், தனுஷின் மாப்பிள்ளை, உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுமார் 11 ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஆஷிஷ் வித்யார்த்தி நடிகரும், பாடகருமான ராஜோஷி பருவா என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகை சகுந்தலா பருவாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆஷிஷ் வித்யார்த்தி கவுகாத்தியை சார்ந்த ரூபாலி பருவ என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி வைரலானது.
அச்சு அசலாக அம்மாவை உரித்து வைத்திருக்கும் நடிகை ரம்பாவின் மகள்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி 60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக பல்வேறு விவாதங்கள் இணையத்தில் நிகழ்ந்தது. இதனையடுத்து தனது இரண்டாம் திருமணம் குறித்து இன்ஸ்டாகிராம் லைவில் பேசியுள்ளார் ஆஷிஷ் வித்யார்த்தி. அதில், 23 ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் எனக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பிரிந்துவிட்டோம்.
55 வயதில் எனக்கு ஒரு துணை வேண்டும் என தோன்றியது. இதற்காக திருமணம் செய்ய முடிவெடுத்தேன். அப்போது தான் ரூபாலியை சந்தித்தேன். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். மேலும், எனக்கு தற்போது 57 வயது தான் ஆகிறது. 60 வயது இல்லை. காதலுக்கு வயது ஒரு தலையில்லை. இருவரும் சந்தோஷமாக இணைந்து பயணம் செய்வோம் என தனது இரண்டாம் திருமணம் குறித்து பேசியுள்ளார் ஆஷிஷ் வித்யார்த்தி.
ஆஷிஷ் வித்யார்த்தியின் இரண்டாம் திருமணம்: வைரலாகும் முதல் மனைவியின் பதிவு.!