மும்பை : நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் படத்திற்காக நீண்ட தாடி மற்றும் மீசையுடன் தனுஷ் காணப்படுகிறார். படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் டி50 படத்தின் சூட்டிங்கை துவங்கவுள்ளார் நடிகர் தனுஷ்.
நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படம் உருவாகி வருகிறது. படத்தில் பிரியங்கா மோகன் தனுஷிற்கு ஜோடியாகியுள்ளார். படத்தின் இசையமைப்பை ஜிவி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். சுதந்திர போராட்ட காலத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகிவருகிறது.
புதிய லுக்குடன் மும்பை விமானநிலையத்தில் தனுஷ் :
நடிகர் தனுஷின் வாத்தி படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகி தெலுங்கு ரசிகர்களையும் கட்டிப் போட்டது. இந்தப் படத்தின்மூலம் தெலுங்கில் தன்னுடைய அறிமுகத்தை தனுஷ் மேற்கொண்டுள்ளார். முன்னதாக ஹாலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். சுதந்திர போராட்டக் காலத்தை மையமாக கொண்டு, பீரியட் படமாக கேப்டன் மில்லர் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் தனுஷிற்கு ஜோடியாகியுள்ளார். மேலும் படத்தில் சிவராஜ்குமார், நிவேதிதா, ஜான் கொக்கன், சுரேமிஷ் மூர், எட்வ்ட் சொனின்ப்ளிக் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
பீரியட் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் பிரியங்காவிற்கும் ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் ஏராளமான துப்பாக்கிக் குண்டுகள், குண்டு வெடிப்புகளுடன் மிகவும் பிரம்மாண்டமான காட்சிகள் அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளி ரிலீசுக்கு இந்தப் படம் தயாராகி வரும் நிலையில், வரும் ஜூன் மாதத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ஜூலை மாதத்தில் டீசரும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்காக நீண்ட தாடி மற்றும் தலைமுடியுடன் வித்தியாசமான லுக்கில் தனுஷ் காணப்படுகிறார். பீரியட் படம் என்பதால், அதற்கான கெட்டப்பிற்காக அவர் தாடி, மீசை, நீண்ட தலைமுடி சகிதம் காணப்படுகிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் கெட்டப்புடன் அவர் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், இந்த புதிய கெட்டப்புடன் அவரை மும்பை ஏர்போர்ட்டில் காண முடிந்தது. இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக அவர் மும்பை சென்றாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆயினும், இந்த கெட்டப்பில் சாதாரண டிஷர்ட், பேண்ட் சகிதம் அவரை கேமிரா கண்கள் படம் பிடித்துள்ளன.