இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தனுஷ் தற்போது அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் பல மொழிகளில் உருவாகும் பான் இந்திய படமாகும். மேலும் மிகப்பிரமாண்டமாகவும் இப்படம் உருவாகி வருகின்றது.
இப்படத்திற்காக தனுஷ் தன் கெட்டப்பையே மாற்றி இருக்கின்றார். தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு தனுஷ் தன் ஐம்பதாவது படத்தை துவங்கவுள்ளார். இப்படத்தை தனுஷ் தானே இயக்கி நடிக்க இருக்கின்றார். பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்து வெற்றி கண்ட தனுஷ் மீண்டும் தன் ஐம்பதாவது படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார்.
Sivakarthkeyan: இந்த முறை மிஸ் ஆகாது..உறுதியளித்த சிவகார்த்திகேயன்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கின்றதாம். கிட்டத்தட்ட நூறு கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராக இருப்பதாக தெரிகின்றது. இதன் மூலம் தனுஷின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாக D50 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
மேலும் இப்படம் வடசென்னை பகுதியை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் படமாக இருக்குமாம். எனவே D50 திரைப்படம் புதுப்பேட்டை, வடசென்னை படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜெ சூர்யாவும் நடிக்கின்றார். இப்படத்தில் தனுஷின் சகோதரராக எஸ்.ஜெ சூர்யா நடிப்பதாக தெரிகின்றது. மேலும் இப்படத்தில் சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால் ஆகியோரும் நடிக்கின்றனர். எனவே ஒரு மல்டி ஸ்டாரர் படமாக உருவாகும் இப்படத்தின் மீது தற்போதே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக இருக்கும் தனுஷ் அப்படத்தின் வேலைகளை முடித்துவிட்டு ஜூலை மாதம் D50 படப்பிடிப்பை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிகப்பெரிய பட்ஜெட், மல்டி ஸ்டாரர், தனுஷ் இயக்கம், சுவாரஸ்யமான கதைக்களம் என தனுஷின் ஐம்பதாவது படத்தில் பல ஸ்பெஷல் விஷயங்கள் இருப்பதால் கண்டிப்பாக இப்படம் தனுஷின் திரைப்பயணத்தில் மிகமுக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.