GSLV-F12 rocket successfully launched | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‛ஜி.எஸ்.எல்.வி – எப் 12 ராக்கெட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சார்பில் ‛ஜி.எஸ்.எல்.வி – எப் 12′ ராக்கெட் வெற்றிகரமாக இன்று காலை 10;42 க்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்குள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின், ‘ஜி.எஸ்.எல்.வி., – எப் 12’ ராக்கெட் மற்றும், ‘என்.வி.எஸ்., – 01’ செயற்கைக் கோளை சுமந்தபடி, இன்று காலை, 10:42 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இதற்கான, ‘கவுன்ட் டவுன்’ நேற்று காலை, 7:21 மணிக்கு துவங்கியது. செயற்கைக்கோளின் எடை, 2,232 கிலோ. இது, கடல், வான்வழி, தரை வழி போக்குவரத்தின் வழிகாட்டி சேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும்.

latest tamil news

இந்த ஜி.எஸ்.எல்.வி., – 12 ராக்கெட்டானது, ஜி.எஸ்.எல்.வி., வகையில் இஸ்ரோ அனுப்பிய, 15வது ராக்கெட். பூமியில் இருந்து இந்த ராக்கெட், செயற்கைகோள், எரிபொருள் உட்பட மொத்தம், 420 டன் எடையை சுமந்து சென்றுள்ளது. வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதையடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.