இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Keerthy Suresh father explanation: கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என தகவல் வெளியான நிலையில் அவரின் அப்பா விளக்கம் அளித்திருக்கிறார்.
கீர்த்திஃபர்ஹான் என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டார் கீர்த்தி சுரேஷ். ஃபர்ஹானுடன் கீர்த்தியை பார்த்தவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேசினார்கள். மேலும் ஃபர்ஹானும், கீர்த்தி சுரேஷும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் தேடிக் கண்டுபிடித்தார்கள். இந்நிலையில் தான் ஃபர்ஹான் என் காதலர் இல்லை என்றார் கீர்த்தி.
Keerthy Suresh:என்னது கீர்த்தி சுரேஷுக்கும், துபாய் தொழில் அதிபர் ஃபர்ஹானுக்கும் விரைவில் திருமணமா?விஜய்விஜய்யை புகழ்ந்த மிஸ்கின்!நண்பர்கள்ஃபர்ஹான் என் நல்ல நண்பர் மட்டுமே என கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்தும் அந்த திருமண பேச்சு அடங்கியபாடில்லை. இந்நிலையில் கீர்த்தியின் அப்பா சுரேஷ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சுரேஷ் கூறியிருப்பதாவது, கீர்த்தியும், ஃபர்ஹானும் நல்ல நண்பர்கள். ஃபர்ஹானின் பிறந்தநாள் அன்று கீர்த்தி வெளியிட்ட புகைப்படத்தை வைத்து ஒரு தமிழ் ஆன்லைன் பத்திரிகை பெரிய விஷயமாக்கியது என்றார்.
திருமணம்சுரேஷ் மேலும் கூறியதாவது, கீர்த்திக்கும், ஃபர்ஹானுக்கும் திருமணம் இல்லை. கீரத்திக்கு திருமணம் நிச்சயமானதும் நானே அறிவிப்பு வெளியிடுகிறேன். கீர்த்தியின் திருமணம் பற்றி பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். நான் உறுதி செய்யாத எந்த தகவலையும் நம்ப வேண்டாம். கீர்த்தி பற்றி பரவும் வதந்திகளால் மன உளைச்சலில் இருக்கிறோம். என் மகளை விட்டுவிடுங்கள் ப்ளீஸ் என தெரிவித்துள்ளார்.
செய்திதன்னையும் ஃபர்ஹானையும் பற்றி வெளியான செய்தியை ட்விட்டரில் பார்த்த கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, இம்முறை என் நண்பருடன் சேர்த்து வைத்து பேசாதீர்கள். நேரம் வரும்போது என் வருங்கால கணவரை நானே அறிமுகம் செய்து வைக்கிறேன். ஒரு முறை கூட அவரை சரியாக கண்டுபிடிக்கவில்லை என கூலாக பதில் அளித்திருந்தார்.
வதந்திKeerthy Suresh:அவர் என் நண்பன், என் காதலரை நேரம் வரும்போது காட்டுகிறேன்: கீர்த்தி சுரேஷ்கீர்த்திக்கும், தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல், விரைவில் திருமணம் என செய்தி வெளியாவது வழக்கமாகிவிட்டது. அதை பார்த்து இது வெறும் வதந்தி என கீர்த்தியும், அவரின் அம்மா மேனாகவும் விளக்கம் அளிப்பதும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தான் இம்முறை கீர்த்தியின் அப்பா சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பதிரகு தாத்தா படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கீர்த்தி. இதையடுத்து தன் பெற்றோர், அக்காவுடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்சித்த கீர்த்தி தெலுங்கில் பேசினார். அங்கிருந்த ஒருவரோ, தமிழில் பேசுங்க மேடம் என்றார். அதை கேட்ட கீர்த்தியோ, ஏங்க திருப்பதியில் இருக்கேன் என பதில் அளித்தார். இதையடுத்து தக் கீர்த்தி என ரசிகர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள்.
Keerthy Suresh: திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி: அந்த ‘தக்’ பதில் தான் அல்டிமேட்
காதல்கீர்த்தியும், அவருடன் பள்ளியில் சேர்ந்து படித்தவரும் பல ஆண்டுகளாக காதலிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. 4 ஆண்டுகள் கழித்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. அது குறித்து அறிந்த ரசிகர்களோ, வாவ் பள்ளி காலத்தில் இருந்து காதல். அதை மெயின்டெய்ன் செய்வதே கடினம். கீர்த்தியை பார்க்கவே பெருமையாக இருக்கிறது என தெரிவித்தனர்.