Punjab rowdy killed in Canada | பஞ்சாப் ரவுடி கனடாவில் கொலை

ஒட்டாவா:அமெரிக்காவில் நடந்த திருமண வரவேற்பின் போது, அதில் பங்கேற்ற இந்திய வம்சாவளியும், பிரபல ரவுடியுமான அமர்ப்ரீத் சமர், மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமர்ப்ரீத் சமர், 28. பிரபல ரவுடியான இவர், அமெரிக்காவில் வசித்தார்.

அங்கும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதால், அமெரிக்க போலீசாரும் அமர்ப்ரீத்தை தேடி வந்தனர்.

இந்நிலையில், கனடாவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, அமர்ப்ரீத் மற்றும் அவரது சகோதரரும், மற்றொரு ரவுடியுமான ரவீந்தர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தென்கிழக்கு ‘மரைன் டிரைவ்’ பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றிருந்தனர்.

அப்போது, விருந்து நடந்த மண்டபத்தின் வெளியே வந்த அமர் ப்ரீத்தை மர்ம நபர்கள் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அதே இடத்திலேயே அமர் ப்ரீத் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோஷ்டி மோதல் காரணமாக கொலை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு, கனடா போலீசாரால் வெளியிடப்பட்ட பிரபல ரவுடிகள் பட்டியலில், அமர் ப்ரீத், அவரது சகோதரர் ரவீந்தர் உட்பட 11 பேர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இதில், ஒன்பது பேர் நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

 அமர்ப்ரீத் சமர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.