இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
கடந்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே சிவகார்த்திகேயனுக்கும் படத்தின் இயக்குனரான அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு என்றெல்லாம் வதந்திகள் பரவின. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என சிவகார்த்திகேயன் கூறியதால் இந்த வதந்தி அடங்கியது.
Sivakarthkeyan: இந்த முறை மிஸ் ஆகாது..உறுதியளித்த சிவகார்த்திகேயன்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தன் அடுத்த பட வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் SK21 திரைப்படத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்கிய நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார். மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியாவதால் மாவீரன் படத்தை ஜூலை மாதமே திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவெடுத்தது.
அதன்படி இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரையில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தில் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. சிவகார்த்திகேயனின் டப்பிங் போர்ஷன் துவங்கியதை படக்குழு வீடியோவாக வெளியிட்டது.
இதைப்பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திலும் ராசி பார்ப்பதாக கூறி வருகின்றார். அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் ஆகிய படங்களுக்கும் டப்பிங் பணிகள் துவங்கிய போது இதைப்போல ஒரு வீடீயோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
அப்படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றன. அதைப்போல சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்கும் தான் டப்பிங் செய்யும் வீடீயோவை வெளியிட்டுள்ளதால் அவர் ராசி பார்க்கின்றார் என சில ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜூலை மாதம் வெளியாகவுள்ள மாவீரன் படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.