இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 68’ படத்தின் கதை குறித்து வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி 68விஜய்யின் ‘லியோ’ படத்தினை ‘தளபதி 68’ படம் குறித்து பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் வைரலாகி வருகின்றன. அஜித்தை வைத்து ‘மங்காத்த’ என்ற பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவுடன் விஜய் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ‘தளபதி 68’ படம் குறித்து வலைப்பேச்சு வீடியோவில் பேசப்பட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லியோ’வாரிசு’ படத்தினை தொடர்ந்து லியோவில் நடிக்க ஆரம்பித்தார் விஜய். கோலிவுட் சினிமா பெரிதும் எதிர்பார்க்கும் படமாக ‘லியோ’ உருவாகி வருகிறது. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இந்தப்படத்தில் இணைந்துள்ளது. ‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் என்பதால் ‘லியோ’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
விஜய் – திரிஷா கூட்டணிசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கேஜிஎப் வில்லன் சஞ்சய் தத் நடித்து வருகிறார். மேலும் பிரபல இயக்குனர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் மற்றும் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அத்துடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் திரிஷா இணைந்து ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
யுவனுடன் இணைந்த விஜய்இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும் நிலையில் விஜய்யின் ‘தளபதி 68’ படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இதனால் ‘தளபதி 68’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ‘தளபதி 68’ அரசியல் கதையசம் கொண்ட படமாக இருக்கும் என கூறப்பட்டது.
தளபதி 68 பட கதைஇந்நிலையில் ‘தளபதி 68’ படத்தின் கதைக்களம் குறித்து பேசியுள்ள வலைப்பேச்சு அந்தணன், இந்தப்படம் அப்பா, மகன் இடையில் நடக்கும் ஈகோ மோதல்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இணையத்தில் வைரலாகும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக ரிலீசான ‘வாரிசு’ படமும் அப்பா, மகன் பாசத்தை கதைக்களமாக வைத்து வெளியானது குறிப்பிடத்தக்கது.