இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
மதுரையில் இருந்து வந்து ஒட்டு மொத்த திரையுலகையும் தன்னை திரும்பி பார்க்க வைத்தவர்
விஜயகாந்த்
. அவர் காக்கிச் சட்டை போட்டால் அது ஒரு தனி அழகு. அவர் எதிரிகளை அடித்தால் அது தனி ஸ்டைல்.
விஜய்யை புகழ்ந்த மிஸ்கின்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன் இருந்தும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். சினிமாவுக்கு வந்தோமா, சம்பாதித்தோமா, சொத்து சேர்த்தோமா, நாம் மட்டும் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்தோமா என்று விஜயகாந்த் இருக்கவில்லை.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பலருக்கும் உதவி செய்தார், செய்து கொண்டிருக்கிறார். சக கலைஞர்களுக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறார். சத்தமில்லாமல் கேப்டன் செய்த உதவிகள் பல.
மக்கள் சேவை செய்ய விரும்பி அரசியலுக்கு சென்றார்.
தேமுதிக
மூலம் மக்கள் சேவை செய்தார். ஆனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தற்போது வீட்டில் இருக்கிறார்.
அந்த வானத்தை போல மனம் படைத்த விஜயகாந்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைத்தவர் சீனியர் நடிகரான ராஜேஷ் தான்.
அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
ஒகு முறை நான் எம்.ஜி.ஆரை. சந்திக்க கிளம்பினேன். அப்பொழுது என்னுடன் வருமாறு விஜயகாந்திடம் கூறினேன். நான் எப்படி அவரை பார்ப்பது என விஜயகாந்த் கேட்டார். வாப்பா பார்க்கலாம் என வலியுறுத்தி அழைத்துச் சென்றேன்.
இவர் தான் விஜயகாந்த் என எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். விஜயகாந்த் முகத்தை பார்த்த எம்.ஜி.ஆரோ. வாங்க வந்து என் அருகில் அமருங்கள் என்றார். ஆனால் விஜயகாந்தோ எம்.ஜி.ஆர். பின்னால் போய் நின்று கொண்டார் என்றார்.
விஜயகாந்தை கருப்பு எம்.ஜி.ஆர். என ரசிகர்கள் அழைப்பது உண்டு. மக்கள் திலகத்தை போன்றே அள்ளி அள்ளி கொடுப்பதற்கு பெயர் போனவர் விஜயகாந்த். அதனால் தான் கேப்டனை கருப்பு எம்.ஜி.ஆர். என அழைக்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.
விஜயகாந்தின் பெயரை சொன்னாலே அவரின் கம்பீரமும், க்யூட் ஸ்மைலும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அப்படி சிங்கம் மாதிரி இருந்த மனிதர் தற்போது உடல்நலம் சரியில்லாமல் மெலிந்து யாரோ மாதிரி இருக்கிறார்.
Vijayakanth: ஓ, விஜயகாந்துக்கும், வடிவேலுக்கும் இடையே பிரச்சனை வர இது தான் காரணமா?!
தற்போதும் அந்த க்யூட் ஸ்மைல் மாறவில்லை. ஆனால் அவர் தன்னை பார்க்க வருபவர்களை பார்த்து ஸ்மைல் செய்தால் அவர்களுக்கு அழுகை தான் வருகிறது. எப்படி இருந்த மனிதர் இப்படியாகிவிட்டாரே என வேதனைப்படுகிறார்கள்.
சிங்க நடை போட்ட மனிதர் தற்போது வீட்டோடு முடங்கிவிட்டாரே என்பது தான் ரசிகர்களின் வேதனையே. அவர் எப்பொழுதாவது வெளியே வந்தால் போதும் ரசிகர்களும், தேமுதிக ஆதரவாளர்களும் குஷியாகிவிடுவார்கள்.
விஜயகாந்தை பார்த்துவிட மாட்டோமா என்கிற ஆசையில் அவர் வீடு இருக்கும் பகுதியில் சுற்றுபவர்களும் உண்டு. பணத்தை மட்டும் அல்ல மக்களின் அன்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் கேப்டன்.
Dhanush: தனுஷ் அக்காவுக்கு டாக்டர் சீட் வாங்கிக் கொடுத்த கேப்டன்: வானத்தை போல மனம் படைச்சவராச்சே
அவர் தனுஷின் அக்காவுக்கு டாக்டர் சீட் வாங்கிக் கொடுத்தது பற்றி அண்மையில் பேச்சாக இருந்தது. தனுஷ் வீட்டில் ஒரு டாக்டர் வர காரணமாக இருந்திருக்கிறார். ஆனால் அதை பற்றி யாரிடமும் சொல்லியது கூட இல்லையே. அந்த குணம் தாங்க கேப்டனின் ஸ்பெஷல் என்கிறார்கள் ரசிகர்கள்.